திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரதத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து சாவித்ரியின் கணவர் முருகன் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 04.02.2022 வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ரவிசங்கர் அவர்கள் குற்றவாளி ஜான்ஜோசப் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல் நிலைய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள், வெகுவாக பாராட்டினார்.