திண்டுக்கல்: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவமணி(35). அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 5 பேர் ரவுடி கும்பல் இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன இந்நிலையில் இவர்கள் கொடைக்கானல் செல்வதற்காக ஸ்கார்பியோ காரில் வந்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திண்டுக்கல், வத்தலகுண்டு, மதுரை ரோடு பெட்ரோல் பங்க் அருகே 4 பேர் சேர்ந்து சிவமணியின் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 4 பேரையும் கைது செய்து ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா