திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் அவரது மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு தமது நண்பர்களுடன் ஆனந்தன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்தனை சரமாரியாக வெட்டி கொலை செய்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர் ஆனந்தனின் நண்பர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு