திண்டுக்கல்: திண்டுக்கல், பேருந்து நிலையம், பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுஇர்பான்(26). என்பவரின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை செய்தது தொடர்பாக நகர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக முத்தழகுப்பட்டி சேர்ந்த செல்வராஜ் மகன் எடிசன்சக்கரவர்த்தி, அருள்ராஜ் மகன் மார்ட்டின்நித்திஷ், தனசாமி மகன் ரிச்சர்டுசச்சின் மற்றும் மாரம்பாடி பகுதியை சேர்ந்த பிரவீன்லாரன்ஸ் ஆகிய 4 பேரை பிடித்து, 2 டூவீலர்களை பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா