திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர், முத்துராமன். (30). அவரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (55). என்பவர் முன் விரோதம் காரணமாக (12.09.2020) அன்று அவரது நண்பர்களான முத்துராமன்(34). ராம்குமார்(32). தில்லை சண்முகம்(29). குணசேகரன்(25). ஆகியோருடன் சேர்ந்து அருவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இது குறித்து பணகுடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (14.11.2024) நீதிமன்றம் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த பணகுடி காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்