திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் முக்கூடலை சேர்ந்த உலகநாதன் (39). என்பவருக்கும் கபாலிபாறையை சேர்ந்த பாலமுருகன் (37). என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் அடிப்படையில் (04.12.2024) அன்று மதியம் உலகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த பாலமுருகன், முருகேசன் (27). வாஞ்சிநாதன் (25). ஆகிய மூவரும் சேர்ந்து உலகநாதனை வழிமறித்து கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து உலகநாதனின் மனைவி இந்துமதி (32). வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாலமுருகன், முருகேசன், வாஞ்சிநாதன் ஆகிய மூவரையும் (05.12.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்