தேனி: தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தேனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.B.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினருக்கும்,
கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சீர்மிகு பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் திரு.k.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.R.லாவண்யா அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
மதுரையில் குழந்தை விற்பனை செய்த வழக்கில் தப்பிச்சென்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்த முதல் நிலை காவலர் திரு.சரவணன் (GrI-2077), குற்றவாளியை பிடிக்க உதவிய மாவட்ட தனிப்பிரிவு
திரு.நாகராஜ்(SSI) அவர்களுக்கும்,
தேனி,பெரியகுளம் உட்கோட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை, மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தனிப்படையினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.B.விஜயகுமாரி அவர்கள் மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளையும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.