மதுரை : மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், வெங்கடாஜலபுரம் 4வது தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சரவணக்குமார், 24/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (21.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்