மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலையம் பகுதியில் கொலை தொடர்பாக சிலைமான் காவல் நிலைய குற்ற எண்: 269/15 u /s 302,307 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) சின்னத்தம்பி (47). ஆயுள் தண்டனை மற்றும் ரூ5,000 அபராதம் விதித்து Additional Sessons Court தீர்ப்பு வழங்கியது அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த காவல்துறை ஆய்வாளர் திரு . வடிவேல் முருகன் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. பாஸ்கரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.