கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள்* முக்கியமான கடுமையான குற்றங்களில் நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில் (28.10.2017) அன்று மனைவியின் கள்ளகாதலை கண்டித்த கணவனை கள்ளகாதலனும் அவரது நண்பரும் சோ்ந்து அடித்து கொலை செய்த வழக்கு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம், குழித்துறையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் (07.12.2024) ம் தேதி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தால் தீா்ப்பு அளிக்கப்பட்டது.அந்த தீா்ப்பின்படி A1 உதய குமார் (48). என்பவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. A2 பிஜு (இறந்து விட்டாா்). இவ்வழக்கில் சாட்சி மற்றும் வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்து வழக்கை விரைந்து முடிக்க காரணமாக இருந்த நீதிமன்ற காவலா் SSI திரு.எல்டா் லியோ மனோகா், காவல் ஆய்வாளா் திரு.பாலமுருகன் மற்றும் மாா்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் திரு.நல்லசிவம் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தாா்கள்.