திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜோசப்(65). மற்றும் அவரது பேத்தி ஆகியோர் (20.10.2025) அன்று இருசக்கர வாகனத்தில், வடக்கன்குளத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சென்ற போது, அதே சாலையில் அதிவேகமாக வந்த, நான்கு சக்கர வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.தகவல் அறிந்து காவல்துறையினர், துரிதமாக செயல்பட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் திருநெல்வேலி , NGO காலனியை சேர்ந்த இளம் சிறார் என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பழவூர் காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து குற்றத்தை ஏற்படுத்திய இளம் சிறாரை, இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்தில், ஆஜர்ப்படுத்தி, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
மேலும், (18). வயது பூர்த்தி அடையாத, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது வரம்பை எட்டாத, தனது மகனுக்கு நான்கு சக்கர வாகனத்தினை ஓட்ட அனுமதித்து, மேற்படி உயிர் இழப்பிற்கு காரணமான , இளஞ்சிறாரின் தாய் மீதும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, (21.10.2025) அன்று அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில்,கொக்கிரகுளம் மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். (18). வயது பூர்த்தியடையாத, வாகன ஓட்டுநர் உரிமம் பெற தகுதி அடையாத இளவர்களுக்கு இது போன்று வாகனத்தினை ஓட்ட அனுமதித்து விலைமதிப்பற்ற மனிதர்களின் உயிர் மற்றும் உடல் பாதிப்பினை ஏற்படுத்தும் இச்செயலை தவிர்த்து, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தி உள்ளார் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்