இராமநாதபுரம்: கடந்த (01.11.2024) ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்புதாளை கிராமத்தில் முத்துக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் ராசய்யா மகன் சொக்கு (எ) உலகநாதன் தொண்டி காவல் நிலைய குற்ற எண் : 220/24 u/s 191 (3), 103 BNS -ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் மேற்படி நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள். இதன்படி தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் (29.11.2024) அன்று சொக்கு (எ) உலகநாதனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.