திருநெல்வேலி: மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், பாப்பாக்குடி, ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் உச்சிமாகாளி 19. என்பவர் கொலை மற்றும் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்.
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு. சந்திரமோகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 27.01.2022 அன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்,
பாளையங்கோட்டை வட்டம், ஆரைக்குளம், அரோமாநகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் பவன்குமார் 36. என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராதா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 27.01.2022 அன்று குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.