நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு மற்றும் டவுன் காவல் நிலைய பகுதிகளில் 31-03-2020 ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் தலைமையில், டவுன் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சதிஷ் குமார் அவர்கள், SJHR உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள், மற்றும் போலீசார் இனைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் கபசுரக்குடிநீர் வழங்கினார்கள்.