புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டம், மாராயப்பட்டி மேட்டுப்பட்டியில் 03.08.2021 ஆம் தேதி அன்று “இயற்கை விவசாய நெல் திருவிழா” நிகழ்ச்சியில் இலுப்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.அருண்மொழி அரசு அவர்கள் கலந்துகொண்டு விவசாய பொதுமக்களிடையே மரம் நட்டு வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மூன்றாம் அலை கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறியும், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், பொது இடங்களுக்கு வெளியில் வரும்பொழுது முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறியும், சைபர் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் இலுப்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களால் மாநில அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவன் தமிழன் என்பவரை பாராட்டி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்கள்.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை