மதுரை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 09.07.2020ம் தேதி கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து 8 போலீசார் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு ஆரோக்கியம் மருந்து பெட்டகம் வழங்கி 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குணமடைந்து திரும்பிய போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.