திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உண்டு குறிப்பாக சுற்றுலா வரும் இளைஞர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்பட்டு வந்தது மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அவர்களுடைய இல்லத்திற்கே கொரியர் சர்வீஸ் மூலம் போதை காளான் அனுப்பப்பட்டு வந்ததை தீவிர சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் மற்றும் இரண்டு துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ள வட்ட கானல் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விடுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் போட்ட கிடுக்கு பிடி விசாரணையில் கொடைக்கானலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா