தேனி: கொரானாவிற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பலியானார்.கம்பம் நகர காவல் நிலையங்களில் அதிக வருடங்கள் பணியாற்றியவர், தற்போது தேசிய நெடுஞ்சாலை வாகனம் (ஹைவே பட்ரோல்) பணியாற்றி வருகிறார்.சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.அழகேசன் 50 கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உத்தமபாளையம் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் (கொரோனா தனிமைப்படுத்தும் மையம்) சிகிச்சையில் இருந்தார்.
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது உடல் குள்ளப்ப கவுண்டன்பட்டியில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.