திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை கீழ்கண்டவாறு எடுத்து கொண்டனர். “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்தவும் உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்று நான் உளமார உறுதி கூறுகிறேன்”.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்