கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராம பகுதியில், சில கிரானைட் குவாரி மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கொரட்டகிரி கிராமதின் சாலை பழுதடைந்து குன்றும் குழியுமாக மாறி காட்சி அளிப்பதோடு மேலும் ஒரு முறை கல் குவாரிகளுக்கு சென்று வரும் டிப்பர் லாரிகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து செல்வதாலும் மேலும் இவ் வழியாக செல்லும் டிப்பர் லாரி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உள்ளது என்றும் இதனால் நாள்தோறும் அச்சத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் ஊர் மக்கள் கூறுகையில் ஆறு மாதத்திற்கு முன்பு இவ் வழியாக வராத கல்குவாரிகளின் லாரிகள் தற்போது நேற்று வந்ததாகவும், அதனை கேட்க சென்ற கிராம பொதுமக்களுக்கும் கல்குவாரி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதா கூறபடுகிறது.
இதற்குயிடையில் டிப்பர் லாரிகளின் கண்ணாடிகளையும் மற்றும் 2 டிரைவர்களை ஊர் பொதுமக்கள் தாக்கியதாக தேன்கணிக்கோட்டை அரசு மருத்துவமணயில், சிகிச்சை பெற்று வரும் லாரி டிரைவர்கள் கூறிவர, தகவலை பெற்றுக் கொண்ட தேன்கனிக்கோட்டை DSP முரளி அவர்கள் நேரில் சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்திய போது ஊர் மக்கள் யாரும் அவர்களை தாக்கவில்லை அவர்களே அவர்கள் தாக்கிக் கொண்டு போய் புகார் அளித்துள்ளார். என்று மென்மேலும் வழியாக கல் குவாரிகளின் டிப்பர் லாரிகள் இயக்கக் கூடாது என்று கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கையில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேன்கனிக்கோட்டை போலீசார் இரண்டு பக்கமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்