திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ளபேரிஜம் ஏரியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பரிசல் சவாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. பரிசல் சவாரியை அனுமதிக்கக் கூடாது என தேனி, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த, பல்வேறு அமைப்பினரும், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களும் கொடைக்கானல் மாவட்ட வனஅலுவலரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி நிறுத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா