திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு. காந்தி தலைமையிலான மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் மாதந்தோறும் 15 நாட்கள் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை உள்பட மலைப்பகுதியில் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து சென்று மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருக்கிறதா? என்று சோதனை நடத்துகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதிகளில் ஜி.பி.எஸ். தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா