திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பரமேஷ்வரியின் மகன் மனோஜ்குமார் (23). இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மனோஜ்குமார் கோபாலகிருஷ்ணனை இரும்புக் கம்பியால் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















