திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது கொடைக்கானல் டிசம்பர் 20 கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவத்தன்று கலையரங்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் ரகலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் ரகளை செய்தவர் கேரளா மாநிலம் பெருதலனாபகுதியை சேர்ந்த முகமது ரோஷன் வயது (29). என்றும் அவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்ததும் தெரிய வந்தது இது தொடர்பாக வழக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடைக்கானல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது இதில் முகமது ரோஷன் ஆஜராக வில்லை இதைத் தொடர்ந்து முகமது ரோசனை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுதத நீதிபதி உயர் திரு. செல்வம் அவர்கள் உத்தரவிட்டார். அதன் பேரில் கொடைக்கானல் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் கேரளாவுக்கு சென்றனர். பின்னர் முகமது ரோசனை போலீசார் கைது செய்து செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா