திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ் ,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின் உள்ளிட்ட மூவரை கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கானது மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, நபர் ஒருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா