திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானலில் பாதி எரிந்த நிலையில் உயிருடன் இருந்த இளைஞரை மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஓர் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு உயிருடன் இருந்த அந்த நபரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் அதனுள் இருந்த ஆதார் கார்டு, மொபைல் போன் மற்றும் கல்விச்சான்றிதழை கைப்பற்றி கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் திருவள்ளுர் மாவட்டம், கொளத்தூரை சேர்ந்த கண்ணப்பிரான் மகன் ஜெகதீஷ்வர் (22) என்பதும், பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

 
                                











 
			 
		    


