திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் “கொடுஞ்செயல் எதிர்ப்பு” உறுதிமொழியை கீழ்க்கண்டவாறு எடுத்து கொண்டனர். அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எந்த வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் எனவும், எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிருக்கும், நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும், உறுதி கூறுகிறோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்