கடலூர் : கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபையில் புதிய கொடிமரம் நிறுவப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சியின் போது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொடிமரம் நிறுவல் பணிகள் மரியாதையுடன் மேற்கொள்ளப்பட்டன. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
















