திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மார்க்கெட் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக அறைக்குள் நகராட்சி கொசு மருந்து அடிக்கும் ஊழியர் பாபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பார்த்த பொழுது தூக்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அலுவலக அறைக்குள் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா