திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியைச் சோ்ந்தவர் தனசேகர் (36). சென்னையில் தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த சில மாதங்களாக கைப்பேசியில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலம் களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தைச் சேர்ந்த சுடலை என்ற சுரேஷ் (20). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் வந்த தனசேகரை, செயலி மூலம் தொடர்புகொண்டு நேரில் பார்க்க வருமாறு பத்மனேரி அருகேயுள்ள கல்குவாரிக்கு சுடலை என்ற சுரேஷ் அழைத்துள்ளார்.
அங்கு அவர் சென்றபோது, மேலும் 4 பேர் ஆயுதங்களை காட்டி மிரட்டி தனசேகரிடம் இருந்த ரூ.1000, கைப்பேசி யுபிஐ மூலம் ரூ.10,000 பறித்துக் கொண்டு அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சுடலை என்ற சுரேஷ், சுடலைக்கண்ணு என்ற சுரேஷ் (19), இசக்கிப்பாண்டி (19). இசக்கியப்பன் (20). ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் ஈடுபட்ட (17). வயது சிறாரை பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
