திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப.,வின் நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P.முருகன், மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், V.ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கைபேசி தொடர்பான புகார்களில் 104 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு (24.01.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு Rs. 17,13,896/- ஆகும். மேலும் காணாமல் போன (அ) தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்