தேனி: நேற்று அதிகாலை பிக் அப் வாகனத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் ஏ.எஸ்.பி.திரு.ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனையடுத்து கம்பம் வடக்கு போலிசார் கம்ப்மெட்டு ரோட்டில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த பிக் அப் வாகனம் போலிசாரை கண்டதும் நிற்காமல் சென்றது.அதனையடுத்து வாகனத்தின் பதிவெண் மூலம் அதன் உரிமையாளரை கண்டுபிடித்து விசாரித்த போது,
கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த தவமணி மற்றும் ராஜா ஆகியோர் ரேசன் அரிசியை சட்ட விரோதமாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது இது குறித்து போலிசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.