மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரிலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணையில் ஈடுபட்டு 2025-ம் ஆண்டு பெறப்பட்ட மனுவில் மனுதாரருக்கு கடந்த 10.11.2025-ம் தேதி அவருடைய 9677958011 செல்போன் எண்ணிற்கு 8508319349 என்ற செல்போன் எண்ணில் இருந்து போன்கால் வந்ததாகவும், அதில் பேசிய நபர் மத்தியபிரதேசம் மும்பை போலீஸ் ஸ்டேசனிலிருந்து போலிஸ் விஜய் கண்ணா பேசுவதாக கூறி வாதியின் பெயர் மற்றும் முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் வாதியின் பெயரில் போலியாக வங்கி கணக்கு தொடங்கி பல கோடி அளவில் பணபரிவர்த்தனை நடைபெற்று இருப்பதால் வாதி மற்றும் வாதியின் மனைவியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் வாதி மற்றும் வாதியின் மனைவியினை Digital Arrest செய்திருப்பதாகவும் வாதியின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் எனக் கூறி வாதி மற்றும் வாதியின் மனைவியினுடைய வங்கி கணக்கில் உள்ள இருப்பு பணம் ரூ.68,17,000/-ஐ உடனே அனுப்ப வேண்டும்.
என கூறியதால், பயந்து போன வாதி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.60,72,000/- ஐ தனது மற்றும் தனது மனைவியினுடைய வங்கி கணக்கு மூலமாகவும் அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் மேலும் பணம் செலுத்தும் படி கூறவே மனுதாரர் சந்தேகமடைந்து தன்னை பணமோசடி வழக்கில் னுபைவையட யுச்சநளவ செய்துள்ளதாக கூறி ரூ.68,17,000/-ஐ பணமோசடி செய்த வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கூடலூர் மற்றும் கேரளாவில் ஆள்மாறாட்டம் செய்து பேசி Digital Arrest பணமோசடி மூலம் பெற்று ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்















