திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றி திரிந்தாலோ, ஏதேனும் பொருட்கள் தங்கள் பகுதியில் கீழே கிடந்தாலோ காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இதன்படி நாங்குநேரி பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் நாங்குநேரி, காமராஜர் தெருவை சேர்ந்த திரு.ஐயப்பன், என்பவர் 31.01.2022 அன்று காலை நாங்குநேரி பேருந்து நிலையத்தில் அருகே உள்ள கழிவறையில் கிடந்த சாக்கு பையை எடுத்து பார்த்துள்ளார். சாக்கு பையை திறந்து பார்த்த போது அதில் 4 சிலைகள், பழங்கால கத்தி ஒன்று இருப்பதை கண்டதும் உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்தார்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் உத்தரவு படி மேற்படி சிலைகள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி பூ விற்பனையாளர் திரு.ஐயப்பன் அவர்களின் செயலை கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் ஐயப்பன் அவர்களை நேரில் அழைத்து அவரின் நேர்மையை பாராட்டி பரிசு மற்றும் பணவெகுமதி வழங்கி கௌரவித்தார்.