திருநெல்வேலி; திருநெல்வேலி மாநகரில் தலைமைக் காவலராகப் பணிபுரியும், திரு. முத்துக்கிருஷ்ணன் என்பவர் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் கேட்பாரற்று கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை மீட்டெடுத்து இன்று 26-12-21 அந்த மோதிரத்தை முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் தொலைந்துபோன மோதிரத்தை காவல் நிலைய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அமலன் அவர்களின் குழந்தை ஜான் உடையது என தெரிய வந்த நிலையில், குறிப்பிட்ட இடத்தில் மோதிரம் தவறிவிட்டது. அமலன் & ஜானிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் அவர் காணாமல் போன மோதிரம் அடையாளம் குறித்து கேட்டறிந்து. முறப்பநாடு காவல் ஆய்வாளர், உயர்திரு.R.பாஸ்கரன் அவர்கள் அமலன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து மோதிரத்தை அவரது குழந்தையை ஜானிடம் ஒப்படைத்தார்…