திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மேலும் இவரை நாய் கடித்தால் வலது கால் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக இருந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா