திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாடிக்கொம்பு, விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் பெரியசாமி(52). என்பவர் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா