மதுரை: இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழாய்களை திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் தகவல். மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள குழாய்களில் கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாக தொடர்ந்து, பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரிய
வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் ,இது தொடர்பாக ரயில் பயணத்தின் போது காவல்
துறையினர் ரோந்து பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத்துக்குள் சுற்றித்திரிந்த கோ புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மது அருந்ததற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 15-க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை மட்டும் கழட்டி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் என , மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டி குழாய்களை மட்டும் திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் ரயில் பயணங்களில் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்
தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி