தேனி: மயிலாடும்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பகுதிகளில் வசிக்கும் மலை கிராம பொதுமக்களின் இருப்பிடம் சென்று தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்
திரு.கௌதமன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மலை கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆடைகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கியும், அங்கு கல்வி பயிலும் குழந்தை செல்வங்களுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கினார்கள்.
மேலும் உதவிகளைப் பெற்றுக்கொண்ட மலை கிராம பொதுமக்கள் மற்றும் குழந்தைச் செல்வங்கள் தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.