மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை கடத்தல் சம்பந்தமாக பேசப்பட்டும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வரும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் இத்தகைய பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை 04364- 240100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினர்.