திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டி, அதிகாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும், போக்சோ சட்டத்தை பற்றியும், போதைப் பொருள் தடுப்பு, வாகன விபத்து உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். மேலும் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் 1098, 181, 1930 ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா