செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மறை மாவட்டம் வல்லம் பகுதியில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது இதில் வியாழக்கிழமை ஜெபமாலை கொடியேற்றம் மற்றும் திருப்பலி விழா தொடங்கியது வெள்ளிக்கிழமை மாலை ஜெபமாலை திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் அருட்தந்தை திமோத்தி, கப்புச்சின்
இறையியல் கல்லூரி பேராசிரியர், சமயபுரம் நற்கருணை ஆசிர்வாதம் அருட்பணி ஹென்றி அருட்பணிஅலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் சனிக்கிழமை மாலை வெள்ளி விழா மற்றும் பங்கு திருவிழா திருப்பலி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையேற்று வழிநடத்தினார்.
இதில் திருப்பலி முடிந்து தேர் ஆசீர்வாதம் செய்தார் திருத்தேர் பவனி ஆனது ஆலயத்திலிருந்து ராட்டின கிணறு வரை சென்று பின்னர் ஆலயம் வந்து அடைந்தது இவ்விழாவில் குருக்கள் மற்றும்புனித அன்னாள் சபை சகோதரிகள் Hearts Home இல்ல குருக்கள் மற்றும் உறுப்பினர்கள் இயேசு சபை குருக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பங்கு மக்கள்கலந்து கொண்டு குழந்தை இயேசுவின் வழியாய் இறை ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















