தர்மபுரி: தர்மபுரி பென்னாகரம் நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி – மாலினி தம்பதியருக்கு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை, கடந்த 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் தாய் கழிவறைக்கு சென்றிருந்த போது காணாமல் போனது.
இதுகுறித்து தர்மபுரி B1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.சரவணன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.பாலசுப்பிரமணி, சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்களை கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி, 48 மணி நேரத்தில் தர்மபுரி அடுத்த இண்டூரில் குழந்தை இருப்பதை கண்டுபிடித்து,
குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்திச் சென்ற குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட தர்மபுரி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தர்மபுரியிலிருந்து நமது போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர்
திரு.மோகன் தாஸ்