செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாய் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை மையத்தில் மருத்துவ நிபுணர்களால் குழந்தை பாக்கியம் அடைவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் , பலமுறை ஐ.யூ.ஐ தோல்வி வயதாகி விட்டதால் இனி குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்ற சந்தேகம் , குடும்ப கட்டுப்பாடு செய்து தற்போது குழந்தை பெற விருப்பமுள்ள தம்பதியர்களுக்கு சிறந்த மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் எம்.சி.ஆறுமுகம், டாக்டர் ஏ.எம்.இந்திரா, டாக்டர் கே.ஜனார்த்தனன் , டாக்டர் கீர்த்திகா ஆறுமுகம் மற்றும் டாக்டர் சுபா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்