மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிபட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றதடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கிடாரிப்பட்டி மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரமெளலி மற்றும் டி.எஸ்.பிக்கள் திரு.முத்துகுமார், திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் மேலூர் மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.ரமாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விளக்கி பேசினர்.
குறிப்பாக குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் போன்றவை நிகழ்ந்தால் பயப்படாமல் 1098 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் அதே போல பெண்களுக்கு நிகழும் வரதட்சனை புகார் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 181 என்ற எண்ணிற்கு பெண்கள் அழைத்து தங்களது குறைகளை கூறலாம் எனவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரமெளலி.தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஹேமலதா மதிவாணன், துணைத்தலைவர் திரு.வீரணன் என்ற தவமணி, கிடாரிபட்டி பள்ளி தலைமையாசிரியர் திருமதி.விஜயலட்சுமி, மேலூர் சார்பு ஆய்வாளர் திருமதி.தரண்யா, மதுரை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பானுமதி, சார்பு ஆய்வாளர் திரு.மணிமாறன், கிடாரிபட்டி கிராம நிர்வாக அலுவலர் திரு.மணிகண்டன், மேலூர் ஊர் நல அலுவலர் திருமதி.தேவி, கிராம செவிலியர் திருமதி.மணிமாலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திரு.ராதாகிருஷ்ணன், மதுரை குழந்தைகள் உறுப்பினர் திருமதி.செல்வி, பெண்கள் வழக்கு பணியாளர் திருமதி.விக்னேஸ்வரி, கிடாரிபட்டி ஊராட்சி செயலர் திரு.பாலமுருகன் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு.ரவி