மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு , உரிமையியல் நீதிபதி ராம் கிஷோர் தலைமை தாங்கி பேசினார். பள்ளித் தலைவர் சிவபாலன், தாளாளர் ஜோசப் பென்சாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கலைவாணி வரவேற்றார். இந்த முகாமில், வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர்கள் முத்துமணி, ராமசாமி, அழகேசன், செல்வக்குமார், அரிச்சந்திரன், விஜயகுமார், சுமிதா, சீனிவாசன், தயாநிதி ஆகியோர் குழந்தைகள் விழிப்புணர்வு சட்டங்கள் மற்றும் போக்சோ, வாகன, போதைபொருள் சட்டங்கள் பற்றி விளக்கி பேசினர். இந்த முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள், அஞ்சல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை, வாடிப்பட்டி வட்ட
சட்டப் பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















