திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கிளப் சார்பில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கான வாராந்திர சதுரங்க பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக கூட்ட அரங்கில் (08.02.2026) அன்று தொடங்கியது. இந்த வகுப்பில், தொடக்க நாளில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2- 4 மணி வரை நடைபெறும் எனவும், சிறப்பாக விளங்கும் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















