திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அவரது உத்தரவுபடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தைகளுக்கான சட்ட உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி, செயலாளா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழக்கறிஞா்கள் மற்றும் சட்ட தன்னாா்வலா்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழக்கறிஞா்கள் மற்றும் சட்ட தன்னாா்வலா்கள், வட்ட சட்டப்பணிகள் குழு, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூா் மற்றும் கொடைக்கானல் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா். இக்குழுவில் உள்ளவா்களுக்கு குழந்தைகளுக்கான சட்ட உதவி திட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி,தலைவர். முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில். இளங்கோ, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி,.வேல்முருகன், POCSO நீதிபதி.முரளிதரன், சிறப்பு அமா்வு நீதிபதி, SC / ST நீதிமன்றம்.விஜயகுமாா், குடும்ப நீதிமன்ற நீதிபதி.சரண், மகிளா நீதிபதி,கனகராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்.தீபா, கூடுதல் சாா்பு நீதிபதி.ரெங்கராஜ், கூடுதல் உரிமையியல் நீதிபதி,.சௌமியா மேத்யூ, குற்றவியல் நீதிமன்றம் எண்1, கலந்து கொண்டனா். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி.முத்துசாரதா, அவா்கள் பேசும்போது சட்ட சம்பந்தமான குழந்தைகள் நலன்கள், உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றியும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சமமாக கருதவேண்டும், தேவைப்படும் நேரத்தில் அன்பும் கண்டிப்பும் காட்ட வேண்டும்,பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெற்றோா்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தாா். (22.11.2024) அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இளம் வழக்கறிஞா்கள் சுமாா் 80 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மேலும் பயிற்சி வகுப்பு வருகின்ற (25.11.2024) அன்றும் நடைபெறும். இந்நிகழ்ச்சியினை செயலாளர். திரிவேணி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா