திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அச்சன்குளம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜன் (27). மற்றும் இருவர் சேர்ந்து ஜெயமாதாபுரம் ஊருக்கு செல்லும் ரோட்டில் மோதிகுளம் அருகே லாரியில் ஜே.சி.பி மூலம் குளத்து மண்ணை அனுமதி இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பணகுடி வட்ட காவல் ஆய்வாளர், அஜுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வராஜனை இன்று கைது செய்தார். மேலும் அவரிமிருந்து 2 யூனிட் குளத்து மண்ணையும், 1 டிராக்டரையும், 2 ஜே.சி.பியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்