திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சண்முகபுரத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஜெபராஜ். (12). இச்சிறுவன் திசையன்விளை நந்தன்குளம் அருகே உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்புத்துறை உடனடியாக செயல்பட்டு இறந்த சிறுவனின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்